20.10.1962: தேசிய ஒற்றுமை தினம்

சீனா இந்தியாவை தாக்கிய 1962, அக்டோபர் 20 - ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
20.10.1962: தேசிய ஒற்றுமை தினம்

சீனா இந்தியாவை தாக்கிய 1962, அக்டோபர் 20 - ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நண்பன் என்று அதுவரை எண்ணி வந்த  நமது அண்டை நாடான சீனா, இதே நாளில் நமது எல்லை பகுதியில் 'திடீர்' தாக்குதலை தொடுத்தது.

இதை சற்றும் எதிர்பாராத நம்முடைய ராணுவ வீரர்கள் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதலில் இறங்கினார்கள்.  இதனால் 10000 முதல் 20000 வீரர்கள் கொண்ட நமது ராணுவம், கிட்டத்தட்ட 80000 வீரர்களைக்  கொண்ட சீனப் படைகளுக்கு எதிராக களம் கண்டது.   

ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்த இந்த போரானது, நவம்பர் 21-ஆம் தேதி சீனா போர் நிறுத்தம் அறிவித்ததன் மூலம் முடிவுக்கு வந்தது. இந்த ஒரு மாத காலத்தில் நமது இந்திய மக்கள் ஓரணியாக ராணுவத்தின் பின்னால்  திரண்டனர்.   அவர்களின் இந்த திறத்தை பாராட்டும் வகையில் போர் துவங்கிய அக்டோபர் 20-ஆம் தேதி 'தேசிய ஒற்றுமை தினமாக ' கொண்டாடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com