23.10.2011 - ஆப்பிள் ஐபாட் உலகிற்கு அறிமுகமான தினம் இன்று!

ஆப்பிள் நிறுவனம் கடந்த 2001 அக்டோபர் 23 ம் தேதி தான் முதன் முதலில் ஐபாட்-ஐ அறிமுகம் செய்தது.

ஆப்பிள் நிறுவனம் கடந்த 2001 அக்டோபர் 23 ம் தேதி தான் முதன் முதலில் ஐபாட்-ஐ அறிமுகம் செய்தது. ஆப்பிளின் இந்த "பாட்டுப் பெட்டி"  அதுவரை வெளிவந்த பல இசை கேட்கும் சாதனங்களை பின்னுக்கு தள்ளி விட்டது; அல்லது, சந்தையில் இருந்து மொத்தமாக ஒழித்து விட்டது.

‘உங்கள் பாக்கெட்டில் ஆயிரம் பாடல்கள்’ என்பதுதான் ஆப்பிளின் விளம்பர வாசகம். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் இந்த ஐபாட் வர்த்தகத்தில் பணத்தை அள்ளியது. ஐபாட் கிளாசிக் என்ற பெயரில் வெளிவந்த கையடக்க இந்த பிளேயர், 5 ஜிபி ஹார்ட் டிரைவ் திறனுடன் வெளிவந்தது.  வெள்ளை எல்சிடி ஸ்கிரீனுடன் வெளியிடப்பட்டது. இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.20000 மதிப்பில் சந்தைக்கு வந்தது.

இப்போது எல்லாம் ஐபாட் கூட சந்தையில் பழசாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com