26.10.1951: இங்கிலாந்து பொதுத்தேர்தலில் வென்று சர்ச்சில் பிரதமரான நாள் இன்று!

சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் இன்னும்மு ழு பெயர் கொண்ட சர்ச்சில் நவம்பர் 30, 1874 அன்று இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள பெலன்ஹெய்ம் அரண்மனையில் வசதியான குடும்பம் ஒன்றில் பிறந்தார்.
26.10.1951: இங்கிலாந்து பொதுத்தேர்தலில் வென்று சர்ச்சில் பிரதமரான நாள் இன்று!

சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் என்னும் முழு பெயர் கொண்ட சர்ச்சில் நவம்பர் 30, 1874 அன்று இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள பெலன்ஹெய்ம் அரண்மனையில் வசதியான குடும்பம் ஒன்றில் பிறந்தார்.

இவர் இங்கிலாந்தின் அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவராவார். இங்கிலாந்தில் 1940 முதல் 1945 வரை முதலிலும், மீண்டும் 1951 முதல் 1955 வரையும் பிரதமராக பதவி வகித்தவர் சர்ச்சில். இவர் இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவராக கருதப்படுகிறார்.

இவர், சிறப்புப் பட்டயப் பதவிப் பெயர்களான ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம் (Order of Garter-OG), காமன்வெல்த் சிறப்பு பட்டயம் (Order of Merit-OM), இங்கிலாந்து - காமன்வெல்த் தனிப் பட்டயம் (Order of Companions Honour-CH), உள்ளிட்ட பல பட்டயங்களையும் கொண்டுள்ளார்.

இவர் 1945 ல் நடந்தத் பொது தேர்தலில் தோல்வியுற்றதால் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். மீண்டும் 1951 தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார். அதனைத் தொடர்ந்து  1955 ல் ஒய்வு பெறும் வரை பதவியில் தொடர்ந்தார்.

இலக்கியத்திற்கான நோபெல் பரிசு பெற்ற ஒரே இங்கிலாந்து பிரதமர் இவரே. அதுமட்டுமன்றி அமெரிக்க நாட்டின் கௌரவக் குடியுரிமை வழங்கப்பட்ட இரண்டாவது நபரும் இவரே.

இத்தகைய சிறப்புக்குரிய சர்ச்சில் தனது 90-ஆவது வயதில், இலண்டன் ஹைட் பூங்காவில் ஜனவரி 24, 1965 அன்று மரணம் அடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com