26.09.1888: புகழ்பெற்ற ஆங்கில கவிஞர் டி.எஸ். எலியட்டின் பிறந்த தினம் இன்று!

டாமஸ் ஸ்டெர்ன்ஸ் எலியட் (Thomas Stearns Eliot) அமெரிக்காவில், செயின்ட் லூயியில் 1888-ல் செப்டம்பர் 6-ம் தேதி பிறந்தார்.
26.09.1888: புகழ்பெற்ற ஆங்கில கவிஞர் டி.எஸ். எலியட்டின் பிறந்த தினம் இன்று!

டாமஸ் ஸ்டெர்ன்ஸ் எலியட் (Thomas Stearns Eliot) அமெரிக்காவில், செயின்ட் லூயியில் 1888-ல் செப்டம்பர் 6-ம் தேதி பிறந்தார். அவருடைய தந்தை ஒரு வணிகர்; தாயார் பள்ளி ஆசிரியை. எலியட் அவர்களின் கடைசி மகன். அவருடைய தாயார் கவிதைகள் எழுதுவார். அவர் தான் எலியட்டுக்கு எழுதுவதற்கு ஆரம்ப கட்ட தூண்டுகோலாக இருந்தார்.

1906-ல் எலியட் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். எலியட்டின் ஆரம்பகால முயற்சிகளை பல்கலைக்கழகத்தில் இருந்த ஒரு இலக்கியப் பத்திரிக்கை வெளியிட்டது. 1910-11-ல் எலியட் ஹார்வார்டிலிருந்து விடுப்பு எடுத்தக் கொண்டு பாரிஸில் தங்கியிருந்த போது எழுதிய சில கவிதைகள் 1915-ல் தான் பத்திரிகைகளில் வெளியாயின.

1914-ல் அவர் ஐரோப்பாவில் மார்பர்க் பல்கலைக் கழகத்தில் சிறிது காலம் படிப்பதற்காக வந்தார்.முதல் உலகப்போர் துவங்கியவுடன் ஆக்ஸ்ஃபோர்டு சென்று விட்டார்.

எலியட் தன்னுடைய இரண்டாவது திருமணத்துக்குப் பின் ஒன்றரை வருடம் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்தார். 1921-ல் லண்டனில் ஒரு வங்கியில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். அதே வருடம் அவர் தனது முதல் கவிதை தொகுதியை வெளியிட்டார். 1921-ன் இறுதியில் அவர் எழுதிய அவருடைய புகழ்பெற்ற படைப்பான 'The Waste Land' பவுண்டின் எடிட்டிங்குப் பிறகு 1922-ல் வெளியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com