29.09.1913: டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த ருடால்ப் டீசல் மாயமாய் மறைந்த தினம் இன்று!

பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிசில் ஜெர்மனியைச் சேர்ந்த பெற்றோருக்கு 18.03.1858 அன்று பிறந்தவர் அறிவியலாளர் ருடால்ப் டீசல்.

இவர் அறிவியல் கண்டுபிடிப்பாளர் மற்றும் இயந்திரப் பொறியியலாளர் ஆவார். டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர். இவரது கண்டுபிடிப்புக்களால் கப்பல்களும் இரயில்களும் நிலக்கரியில் ஓடுவதிலிருந்து டீசலுக்கு மாறின. 1892ல் தனது பெயரினாலான இயந்திரத்துக்கு காப்புரிமை பெற்றார்.

1913ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதிக்குப் பிறகு இவரை யாரும் உயிரோடு பார்க்கவில்லை. 1913ல் இலண்டனில் சென்ற கப்பலில் பயணித்த ருடால்ப் டீசல் திடீரெனக் காணாமல் போனார். பத்து நாட்களுக்குப் பின்னர் இவரது உடல் கிடைத்தது. இவரது மரணத்துக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. தற்கொலை செய்திருக்கலாம் அல்லது நிலக்கரிச் சுரங்க முதலாளிகள் இவரைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com