27.04.1791:  தந்தி அனுப்புவதற்கான சங்கேத மொழியை உருவாக்கிய சாமுவேல் எஃப்.பி. மோர்ஸ் பிறந்த தினம் இன்று!

1844ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் முதல் தந்தியை, சாமுவேல் எஃப்.பி. மோர்ஸ் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலிருந்து பால்டிமோருக்கு ...
27.04.1791:  தந்தி அனுப்புவதற்கான சங்கேத மொழியை உருவாக்கிய சாமுவேல் எஃப்.பி. மோர்ஸ் பிறந்த தினம் இன்று!

1844ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் முதல் தந்தியை, சாமுவேல் எஃப்.பி. மோர்ஸ் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலிருந்து பால்டிமோருக்கு சோதனை முறையில் அனுப்பினார். இவர்தான் தந்தி அனுப்புவதற்கான சங்கேத மொழியை உருவாக்கியவர். அதனால்தான் அந்த மொழிக்கே மோர்ஸ் கோட் (MORSE CODE) என்று பெயர்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு குறியீடு இருக்கும். அந்தக் குறியீட்டை மோர்ஸ் பலகையில் (morse key) அழுத்தி மறுமுனைக்குப் புரிய வைப்பார்கள். அதனை அங்குள்ளவர் புரிந்துகொண்டு செய்தியை எழுதிக்கொள்வார். அந்தச் செய்தி ஒரு தாளில் எழுதப்பட்டு சம்பந்தப்பட்டவருக்குக் கொடுக்கப்படும். இதற்கெனப் பயிற்சி பெற்றவர்களே தந்தி அலுவலகத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். மோர்ஸ் பலகை இயந்திரத்தில் கட்..கடா..கட்... என்று எழுப்பப்படும் ஓசையிலேயே செய்திகள் புரிந்து கொள்ளப்படும்.

தொலைப்பேசியை கிரஹாம் பெல் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை தந்தி சாதனம்தான் உலகின் தகவல் தொடர்புக் கருவியாக இருந்தது. அதாவது, புறாக்களின் கால்களில் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்த காலத்திற்கு அடுத்தபடியாக, தகவல் அனுப்பும் முதல் அறிவியல் சாதனம் தந்தி அனுப்பும் கருவிதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com