28.04.1937: இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் பிறந்த தினம் இன்று!

சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார்.
28.04.1937: இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் பிறந்த தினம் இன்று!

சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 9 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.

ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 2 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.

அதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசு ஒன்றை நடத்தினார். ஈரான் – ஈராக் போர் (1980–1988) மற்றும் குவைத் போர் (1991) நடந்த காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது.

ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com