07.02.1879: சுதநதிர போராட்ட வீரர்  ஜதீந்திரநாத் முகர்ஜி பிறந்த தினம் இன்று! 

ஜதீந்திரநாத் முகர்ஜி  தற்போதைய வங்கதேசத்தின் நாதியா மாவட்டம் காயாகிராம் கிராமத்தில் 07.02.1879 அன்று பிறந்தார்.
07.02.1879: சுதநதிர போராட்ட வீரர்  ஜதீந்திரநாத் முகர்ஜி பிறந்த தினம் இன்று! 

ஜதீந்திரநாத் முகர்ஜி  தற்போதைய வங்கதேசத்தின் நாதியா மாவட்டம் காயாகிராம் கிராமத்தில் 07.02.1879 அன்று பிறந்தார். இவருக்கு 5 வயது இருந்தபோது தந்தை இறந்துவிட்டார். அம்மாவுடன் தாத்தா வீட்டில் வளர்ந்தார். அன்பு காட்டுவதோடு, கண்டிப்புடனும் குழந்தைகளை வளர்த்தார் அம்மா.

துணிச்சல் மிக்கவராக வளர்ந்து வந்தார் ஜதீன்.  மல்யுத்தம், நீச்சல், குதிரை ஏற்றத்தில் பயிற்சி பெற்றார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக புரட்சிகரமான செயல்களை செய்துவந்த ‘யுகாந்தர்’ அமைப்புக்குத் தலைவராக செயல்பட்டார்.

அந்த கிராமத்தில் உள்ள எழுத்தாளர்கள், கவிஞர்களிடம் சுதந்திரக் கனலை மூட்டி, பல படைப்புகள் உருவாகச் செய்தார். ஜாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் உதவினார்.

கல்கத்தா மத்திய கல்லூரியில் (தற்போதைய குதிராம் போஸ் கல்லூரி) சேர்ந்தார். ராஷ்பிகாரி போஸ் உள்ளிட்ட தலைவர்களின் பேச்சுக்கள், கதர் கட்சி வீரர்களின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார்.

சுவாமி விவேகானந்தரை அடிக்கடி சந்தித்தார். அரசியல் ரீதியில் சுதந்திரமான இந்தியா மற்றும் மனித குலத்தின் ஆன்மிக வளர்ச்சி குறித்த அவரது சிந்தனைகள் இவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

அரவிந்தரின் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்து அவரது வலதுகரமாக செயல்பட்டார். ஆங்கில அரசுக்கு எதிராக பல்வேறு புரட்சிப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த ஜதீந்திரநாத் முகர்ஜி, 1915-ல் நடந்த ஒரு மோதலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். 36-வது வயதில் வீரமரணம் எய்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com