26.02.2014: ஈழத்து கலைஞர் கே. எஸ். பாலச்சந்திரன் இறந்த தினம் இன்று!

கே. எஸ். பாலச்சந்திரன் என்று அறியப்படும் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் 10 சூலை 1944 அன்று யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டியில் பிறந்தார்.
26.02.2014: ஈழத்து கலைஞர் கே. எஸ். பாலச்சந்திரன் இறந்த தினம் இன்று!

கே. எஸ். பாலச்சந்திரன் என்று அறியப்படும் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் 10 சூலை 1944 அன்று யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டியில் பிறந்தார். இவர் கரவெட்டி விக்னேசுவராக் கல்லூரியிலும், யாழ் மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார். இளமைக் காலத்தில் உதைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், இறகுப்பந்தாட்டம் உட்பட்ட பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுபட்டார்.

ஈழத்தின் அறியப்பெற்ற பல்துறைக் கலைஞர். நகைச்சுவை, வானொலி, நாடகம், நடிப்பு, திரைப்படம், தொலைக்காட்சி, எழுத்து எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். ஈழத்து கலைத்துறைகளில் நெடுங்காலம் செயற்பட்ட இவர், பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து தொடர்ந்து இயங்கி வந்தார்.

உடல்நலக் குறைபாட்டால் 26.02.2014 அன்று மரணமடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com