10.01.2008: உலகின் மிகச் சிறிய காரான டாடாவின் 'நானோ' அறிமுகப்படுத்தப்பட்ட தினமின்று!

டாடா நானோ என்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் இந்திய சந்தையை முதன்மையாகக் குறி வைத்து உருவாக்கப்பட்ட, நான்கு பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய கார் வகையாகும்
10.01.2008: உலகின் மிகச் சிறிய காரான டாடாவின் 'நானோ' அறிமுகப்படுத்தப்பட்ட தினமின்று!

டாடா நானோ என்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் இந்திய சந்தையை முதன்மையாகக் குறி வைத்து உருவாக்கப்பட்ட, நான்கு பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய கார் வகையாகும்.

இந்தக்காரில் எஞ்சின் முதலான பாகங்கள் காரின் பின்புறம் பொறுத்தப்பட்டுள்ளன.  இந்தக் கார் சிறந்த எரிபொருள் பயன்பாட்டுத் திறன் உள்ள ஒன்றாகும். நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 26 கிலோமீட்டர்களும்,  நகரப்பகுதிகளில்  22 கிலோமீட்டர்களும் மைலேஜாக கிடைக்கிறது.

இந்த காரணத்து முதன்முறையாக ஜனவரி 10, 2008 ல் இந்தியத் தலைநகர் புது டில்லி ப்ராகதி மைதானில் நடைபெற்ற ஒன்பதாம் வருடாந்திர வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது

நானோ வணிக ரீதியிலான விற்பனை 2009 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று துவங்கப்பட்டது. காரின் தொடக்க விலை ரூபாய் 115,000 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com