14.01.1977: பிரபல கார் பந்தய வீரர் நாராயண் கார்த்திகேயனின் பிறந்த தினம் இன்று!

நாராயண் காரத்திகேயன் ஒரு பிரபல கார் பந்தய வீரராவார். சென்னையில் பிறந்தவரும் கோயம்புத்தூரைச் சேரந்தவருமான இவர், உலக மோட்டர் பந்தயங்களிலேயே...
14.01.1977: பிரபல கார் பந்தய வீரர் நாராயண் கார்த்திகேயனின் பிறந்த தினம் இன்று!

நாராயண் காரத்திகேயன் ஒரு பிரபல கார் பந்தய வீரராவார். சென்னையில் பிறந்தவரும் கோயம்புத்தூரைச் சேரந்தவருமான இவர், உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொண்ட முதல் மற்றும் ஒரே இந்தியர் ஆவார்.

நாராயண் கார்த்திகேயனின் தந்தை ஜி. கார்த்திகேயனும் ஒரு கார் பந்தய வீரராவார். தன் தந்தையின் பாதிப்பில் இளமையிலேயே பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஆவல் அவருக்கு உண்டானது. முதலில் இந்திய ராலி பந்தயங்களில் பங்கு கொள்ளத் தொடங்கினார். ஸ்ரீபெரும்புதூரில் நடந்த முதல் போட்டியிலேயே முதல் மூன்று வீரர்களுள் ஒருவராக வெற்றி பெற்றார்.

அதன் பிறகு பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்கிருந்த எல்ஃப் வின்பீல்ட் பந்தயப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். 1992இல் அங்கு நடந்த பார்முலா ரெனால்ட் கார்களுக்கான பைலட் எல்ப் போட்டிகளில் அரை இறுதிச் சுற்று வரை வந்தார். பின்னர் 1993ல் இந்தியாவில் பார்முலா மாருதி பந்தயங்களிலும், பிரிட்டனில் பார்முலா வாக்ஸ்ஹால் இளைஞர் பந்தயங்களிலும் கலந்து கொண்டார். 1994ல் பார்முலா ஜீடெக் பந்தயங்களில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் ஓட்டினார்.

அதன் பிறகு பிரிட்டிஷ் பார்முலா போர்டு குளிர்கால பந்தயங்களில் கலந்து கொண்டு ஐரோப்பாவில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 1995ல் பார்முலா ஆசியா பந்தயங்களில் கலந்து கொண்ட நாராயண் கார்த்திகேயன், மலேசியாவில் நடந்த போட்டியில் இரண்டாமிடத்தில் முடித்தார். 1996ல் பார்முலா ஆசியா பந்தயங்களிலேயே முதல் வீரராக வந்து இப் பந்தயங்களிலேயே முதலில் வந்த முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார். 1997இல் பிரிட்டிஷ் பார்முலா ஓபல் பந்தயங்களில் கலந்து கொண்டு ஆறாம் இடத்தில் முடித்தார்.

இவரது திறமையை பாராட்டி 2010-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com