23.01.1897: விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!

தலைவர் என்னும் பொருள்பட 'நேதாஜி' என்று இந்தியாய் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் 23.01.1897 அன்று கொல்கத்தாவில் பிறந்தார்
23.01.1897: விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று!

தலைவர் என்னும் பொருள்பட 'நேதாஜி' என்று இந்தியாய் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் 23.01.1897 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். இவர் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியாவர். அவர்களின் மூலம் அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

பின்னர் ஒரு விமானப் பயணத்தின் பொழுது இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் இறந்து விட்டதாகவும், ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல்வேறு கருத்துக்கள் உள்ளன.

1945 ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்தது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற பலரின் வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது.

இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com