10.06.1960: பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பிறந்த தினம் இன்று!
By DIN | Published on : 10th June 2017 12:00 AM | அ+அ அ- |

நந்தமூரி பாலகிருஷ்ணா என்னும் பாலகிருஷ்ணா புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட நடிகராவர். இவர் ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என். டி. ராமராவ் அவர்களின் ஆறாவது மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 'தாத்தம்மா கலா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் என். டி. ராமராவ் - பசவ தரகம் தம்பதியினருக்கு மகனாக சென்னையில் பிறந்தார். அப்போது தெலுங்கு திரையுலகமும் பெரும்பாலும் சென்னையிலேயே இயங்கிவந்தது. அதனால் பாலகிருஷ்ணாவின் குழந்தைப்பருவம் சென்னையிலேயே கழிந்தது.
அதன் பின் ஆந்திரா,தமிழ்நாடு,கேரளா பிரிவினையின் போது பாலகிருஷ்ணாவின் குடும்பம் ஆந்திராவுக்கு குடிபெயர்ந்தது. இளங்கலை வணிகவியல் படிப்பை ஐதராபாத்தில் உள்ள நிசாம் கல்லூரியில் பாலகிருஷ்ணா முடித்தார். 1982ல் வசுந்திரா தேவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.