16.03.1968: வியட்நாம் போரின் பொழுது அமெரிக்காவால் 'மை லாய் படுகொலைகள்'  நிகழ்த்தப்பட்ட தினம் இன்று!

மை லாய் படுகொலைகள் (My Lai Massacre) என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் ...
16.03.1968: வியட்நாம் போரின் பொழுது அமெரிக்காவால் 'மை லாய் படுகொலைகள்'  நிகழ்த்தப்பட்ட தினம் இன்று!

மை லாய் படுகொலைகள் (My Lai Massacre) என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 347 முதல் 504 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிப்பதாகும்.

இந்த படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பெரும்பாலானோர் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோ அலல்து அடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டோகொள்ளப்பட்டனர்.

பெரும்பாலானோரின் உடல்கள் பெரும் சிதைவுக்குள்ளாகிக் கண்டுபிடிக்கப்பட்டன. இப்படுகொலைகள் வியட்நாம் போரின் போது சோன் மை என்ற கிராமத்தில் மை லாய் மற்றும் மை கே ஆகிய பகுதிகளில் இடம்பெற்றது.

ஆரம்பத்தில் 26 அமெரிக்கப் போர்வீரர்கள் இப்படுகொலைகளுக்குக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், லெப்ட்டினன்டாகப் பணியாற்றிய வில்லியம் கேலி என்பவனுக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. முதலில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டாலும், இது பின்னர் 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, அத்தண்டனையையும்  அவனை தனது வீட்டிலேயே கழித்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com