18.05.1974: இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்திய தினம் இன்று!

இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்த பொழுது, 1974-ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்தியா தனது முதல் அணுக்கரு வெடிப்பு ..
18.05.1974: இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்திய தினம் இன்று!

இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்த பொழுது, 1974-ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்தியா தனது முதல் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகளை செயல்படுத்தியது. சிரிக்கும் புத்தர் (Smiling Buddha) என்பது இதனையாக்  குறிப்பதற்கான ரகசிய குறிச்சொல் ஆகும்.

இந்த அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில் 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று நிகழ்ந்தது. அதுவரை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஐந்து நாடுகள் மட்டுமே இதற்கான வல்லமை படைத்த நாடுகளாக கருதப்பட்டு வந்தது. சபையின் உறுப்பினராக இல்லாத இந்தியா இந்த பரிசோதனைகளை நிகழ்த்தியதை இதர நாடுகள் உறுதி செய்தது.

இந்தியா இந்த பரிசோதனைகளை கனடா நாட்டின் அணுமின் உலை தொழில் நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தியது. இந்த அணுக்கரு வெடிப்பின் பொழுது வெளிப்பட்ட ஆற்றலின் அளவு சுமார் எட்டு கிலோ டன்கள் (டி.என். டி வெடிபொருள் வெடிப்புக்குச் சமம்) என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com