20.05.1998: ப்ளூடூத் தொழில்நுட்பம் கண்டறியப்பட்ட நாள் இன்று!

புளூடூத் என்பது குறைந்த தொலைவிலுள்ள நிலையான அல்லது மொபைல் சாதனங்களிடையே தரவைப் பரிமாறிக்கொள்ள ...
20.05.1998: ப்ளூடூத் தொழில்நுட்பம் கண்டறியப்பட்ட நாள் இன்று!

புளூடூத் என்பது குறைந்த தொலைவிலுள்ள நிலையான அல்லது மொபைல் சாதனங்களிடையே தரவைப் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு திறந்த தரநிலை கம்பியில்லா நெறிமுறை ஆகும்

புளூடூத் என்ற சொல்லானது பழைய ஜெர்மானிய மொழியிலான "ப்ளாடோன்" (Blátönn) அல்லது டேனிஷ் மொழியிலான "ப்ளாட்டேண்ட்" (Blåtand) ஆகிய சொற்களின் ஆங்கில வடிவமாகும். இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த டென்மார்க்கின் முதலாம் ஹரால்ட் மன்னன் சிங்க் ஹெசால்ட் ப்ளாடண்ட் என்பவனின் சிறப்புப் பெயராகும். இந்த அரசனுக்கு புளூபெரீஸ் பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதைச் சாப்பிட்டு அவனது பற்கள் எல்லாம் நீலக்கறை படிந்திருந்தது. இதனால் அம்மன்னனை "புளு டூத்" என்று அழைக்கத் தொடங்கினர். அம்மன்னர் வேறுபட்ட டானிஷ் பழங்குடியினரை ஒன்றிணைத்து, அங்கிருந்த பல குறுநிலங்களை எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து ஒரே பேரரசாகக் கட்டமைத்தார். புளூடூத் தொழில்நுட்பமும் அவரைப் போலவே தகவல்தொடர்பு நெறிமுறைகளை ஒரே தரநிலைக்குக் கொண்டு வரும் செயலைச் செய்கிறது என்பதால் இப்பெயர் வழங்கப்பட்டது.[2][3][4]

ஜெர்மானிய எழுத்துகளான H-rune.gif (ஹகால்) (Hagall) மற்றும் Runic letter berkanan.svg (பெர்க்கனான்) (Berkanan) ஆகியவை இணைந்த இணைப்பெழுத்துக்களின் சேர்க்கையே புளுடூத் சின்னம் ஆகும்.

புளுடூத் குறிப்புவிவரம் 1994 ஆம் ஆண்டில் ஜாப் ஹார்ட்ஸன் மற்றும் ஸ்வென் மேட்டிஸன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அவர்கள் ஸ்வீடனில் உள்ள லண்ட் என்ற இடத்திலுள்ள எரிக்சன் மொபைல் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள்.  குறிப்புவிவரமானது அதிர்வெண் கற்றை தொழில்நுட்பத்தை (Frequency-hopping spread spectrum technology) அடிப்படையாகக் கொண்டது.

இந்தக் குறிப்புவிவரங்கள் புளுடூத் சிறப்பார்வக் குழுவால் (சிறப்பார்வக் குழு-SIG) முறைப்படுத்தப்பட்டன. SIG-ஆள் இந்த விபரங்கள் முறையாக 1998 ஆம் ஆண்டு மே 20 அன்று அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com