28.05.1908: உலகப்புகழ்பெற்ற 'ஜேம்ஸ் பாண்ட் 007'  கதாபாத்திரத்தை உருவாக்கிய ஐயன் பிளம்மிங் பிறந்த தினம் இன்று..!

ரகசிய உளவாளி, ஏஜெண்ட்-007, பாண்ட் போன்ற புனைப்பெயர்களால் வர்ணிக்கப்படும் சுவாரசியமான கதாபாத்திரம் 'ஜேம்ஸ் பாண்ட்'.
28.05.1908: உலகப்புகழ்பெற்ற 'ஜேம்ஸ் பாண்ட் 007'  கதாபாத்திரத்தை உருவாக்கிய ஐயன் பிளம்மிங் பிறந்த தினம் இன்று..!

ரகசிய உளவாளி, ஏஜெண்ட்-007, பாண்ட் போன்ற புனைப்பெயர்களால் வர்ணிக்கப்படும் சுவாரசியமான கதாபாத்திரம் 'ஜேம்ஸ் பாண்ட்'. 19-ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை பல நடிகர்களின் வித்தியாசமான நடிப்பில்  ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உயிர்ப்புடன் துப்பறிந்து வருகிறது.

இத்தகைய அழுத்தமான கதாபாத்திரத்திற்கு சொந்தக்காரர் இங்கிலாந்தை சேர்ந்த 'அயன் பிளமிங்'.

அயன் பிளமிங், இங்கிலாந்தில் உள்ள மே-பேரில் பிறந்தவர். இவரது தந்தை வாலன்டைன் பிளம்மிங், ஹென்லி பகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார். கல்லூரி படிப்பை நிறைவு செய்த பிளமிங் நாளிதழ் ஒன்றில் துணை ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து வெளியேறி தந்தையின் தொழில்களை கவனிக்க ஆரம்பித்தார்.

இரண்டாம் உலக போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம் அது. ரியர் அட்மிரல் ஜான் காட்பிரை என்ற கடற்படை உளவுப்பிரிவில் அயன் பிளமிங் சேர வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி குறுகிய காலத்திலேயே கமாண்டராக பணி உயர்வு பெற்றார். 1942-ம் ஆண்டில் '30 அசால்ட்ஸ் கமாண்டோ' என்ற சிறப்பு உளவு படைக்கு தலைமை தாங்கும் பொறுப்பு பிளமிங்கிற்கு கிடைத்தது. அங்கு பணியாற்றிய உளவாளிகளின் குணாதிசயங்களை ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தில் நிலைநிறுத்தி 1950-ம் ஆண்டில் 'காசினோ ராயல்' என்ற கதையை எழுதினார். இதுவே ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் முதல் கதை.

இதனை தொடர்ந்து 1952-ம் ஆண்டில் 'கோல்டன் ஐ' என்ற புத்தகத்தை எழுதி முடித்தார். பத்திரிகை துறையில் பணியாற்றிய அனுபவம் இவரை தொடர்ச்சியாக எழுத செய்தது. 1953-ம் ஆண்டு முதல் 1966-ம் ஆண்டிற்குள்ளாக 12 புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இதில் 'மேன் வித் த கோல்டன் கன்', 'ஆக்டோபுசி அண்ட் த டே லைட்' போன்ற கதைகளை ரஷியாவில் பனிபொழிவு பிரதேசங்களில் பணியாற்றிய அனுபவங்களை கொண்டு எழுதினார்.

அயன் பிளமிங்கின் ஜேம்ஸ் பாண்ட் கதைகளுக்கு லண்டன் நாட்டின் பிரபல எழுத்தாளரான ஜோவன் ஹ¨ என்பவர் அச்சு வடிவம் கொடுத்தார். இவரை தவிர மற்றவர்களிடம் பிளமிங் கதைகளை பகிர்ந்து கொண்டது கிடையாது. ஜேம்ஸ் பாண்ட் கதைகள் மீதான மக்களின் ஆர்வம் குறைபடாமல் இருக்க வேண்டும் என்பதில் முழு முனைப்புடன் செயல்பட்டார். கதைகளை எழுதும் போதே ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் கற்பனை சித்திரத்தையும் வரைந்தார். அவை ஸ்டைலான தலை முடி, அகன்ற முகம், புகைப்பிடிக்கும் பழக்க வழக்கம் என அயன் பிளமிங்கை இளமை தோற்றத்தில் வரைந்தது போன்று காட்சியளித்தன. புத்தகத்தின் முதல் பக்க அட்டை மற்றும் உள்பக்கத்தில் இடம்பெறும் புகைப்படங்கள் அத்தனையும் தானாகவே உருவாக்கினார். காசினோ ராயல் மூன்று பதிப்புகளாக வெளியிடப்பட்டது. அதற்கு பின்னரும் அச்சிடப்பட்டு வெளியானது. அன்று முதல் இன்று வரை ஜேம்ஸ் பாண்ட் கதைகள் பல்வேறு நவீன மாற்றங்களுடன் நூலகங் களையும், வீடுகளையும் அலங்கரித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com