கருணாநிதி எழுத்தில் உருவான திரைப்படங்கள்

2011-ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னர் சங்கர் திரைப்படம், திரைத்துறையில் அவருடைய எழுத்தில் வெளியான கடைசி திரைப்படமாக அமைந்தது. 
கருணாநிதி எழுத்தில் உருவான திரைப்படங்கள்

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி தன்னுடைய 20 வயதில், ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றத் தொடங்கினார். அன்று முதல் திரைக்கதை மற்றும் பாடல் எழுதுவதில் அவரது திறமையை நிரூபிக்கத்தொடங்கினார்.

அவரது முதல் படமான ராஜகுமாரி மிகப்பெரிய வெற்றியடைந்து எழுத்துக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தீவிர அரசியலில் ஈடுபட்ட பின்னரும், திரைப்படங்களுக்கு எழுதுவது தொடர்ந்தது. 2011-ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னர் சங்கர் திரைப்படம், திரைத்துறையில் அவருடைய எழுத்தில் வெளியான கடைசி திரைப்படமாக அமைந்தது.

  • பொன்னர் சங்கர் (2011)
  • இளைஞன் (2011)
  • பெண் சிங்கம் (2010)
  • உளியின் ஓசை (2008)
  • பாசக் கிளிகள் (2006)
  • கண்ணம்மா (2005)
  • மண்ணின் மைந்தன் (2005)
  • புதிய பராசக்தி (1996)
  • மதுரை மீனாட்சி (1993)
  • காவலுக்கு கெட்டிக்காரன் (1990)
  • நியாய தராசு (1989)
  • பாசப் பறவைகள் (1988)
  • பாடாத தேனிக்கள் (1988)
  • நீதிக்கு தண்டனை (1987)
  • பாலைவன ரோஜாக்கள் (1985)
  • காலம் பதில் சொல்லும் (1980)
  • பிள்ளையோ பிள்ளை (1972)
  • அவன் பித்தனா? (1966)
  • பூமாலை (1965)
  • பூம்புகார் (1964)
  • காஞ்சித் தலைவன் (1963)
  • இருவர் உள்ளம் (1963)
  • தாயில்லாப் பிள்ளை (1961)
  • அரசிளங்குமரி (1961)
  • குறவஞ்சி (1960)
  • புதுமைப் பித்தன் (1957)
  • புதையல் (1957)
  • ராஜா ராணி (1956)
  • ரங்கூன் ராதா (1956)
  • மலைக்கள்ளன் (1954)
  • திரும்பிப் பார் (1953)
  • பணம் (1952)
  • மனோகரா (1952)
  • மணமகள் (1952)
  • பராசக்தி (1952)
  • மந்திரக் குமாரி (1950)
  • மருதநாட்டு இளவரசி (1950)
  • அபிமன்யு (1948)
  • ராஜகுமாரி (1947)
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com