மழை நீர் போல: ராஜகவி ராகில் 

ஈர விறகு வறுமை 
எரிந்து சாம்பலாகாமல் 
புகைந்து கொண்டே இருக்கிறது 

ஏழை வாழ்க்கைக் கிணற்றில் 
வறுமை நீர் நன்றாகவே ஊறுகிறது 

குடையுமில்லை 
ஒதுங்கக் கூரையும் இல்லை 
ஏழை மேகம் நன்றாகவே பொழிகிறது 
வறுமை மழை 

அரசியல்வாதி சுயநல வயலில் 
ஏழையின் வறுமை விதைத்து 
அமோகமாய் வாக்குகள் அறுவடை செய்கிறான் 

வறுமைச் சேற்றுப் புதை குழிக்குள் 
விழுந்த ஏழை 
புதைந்து மூழ்கி இறக்கும் வரை 
பார்த்து இரசிக்கிறான் பணக்காரன்

ஏழை
குற்றம் புரியாமலே
பிடித்து அடைத்து வைத்திருக்கிறது 
வறுமைச் சிறைச்சாலை 

துடைக்கத் துடைக்கப் படிந்து கொண்டேயிருக்கிறது
ஏழை வாழ்க்கைக் கண்ணாடியில்
வறுமைப் புழுதி 

ஏழை பின்னாடியே ஓடிவருக்கின்ற 
வறுமை 
பூனைக் குட்டி 

வறுமையின் வரட்சி வேர் 
செழிக்க 
சமவுடமை பொழிய வேண்டும் 
மழை நீர் போல 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com