மழை நீர் போல: ரெத்தின.ஆத்மநாதன்,

அக்கால அரசியலில் அத்தனை தலைவர்களும்மாதம் மூன்று முறை மகிழ்வுடனே பொழிகின்ற மழைநீர்    போலவே மானம்    மிகக்கொண்டு மக்களின் நலங்காக்கும் மகத்தான சேவையிலேதன்னை   மறந்து    தன்குடும்பம்     மிக மறந்து ஊருக்காய்ப் பிறந்ததாய் உளத்துள் நனிமகிழ்ந்துஉடல் பொருள் ஆவியென்று ஒன்றையும் தனக்கில்லாமல்அடுத்தவர் வாழ்க்கைக்கே ஆசையாய் கொடுத்துவுந்தார்!தலைவன்  எவ்வழியோ தானும்  அவ்வழியென்று தொண்டர்களும் விரும்பியேற்று துவளாமல் பணியாற்ற அதிகார    வர்க்கமும்   அதிவேகம்    தனைக்காட்ட நாட்டில்   முன்னேற்றம்   நயமாய்ப்   பரவி ஒளிவீசபார்த்த மேகங்கள் பலமுறை கூடிக் கூட்டம் போட்டுவேண்டும்    இடங்களில்    விரும்பும்     அளவுக்கு பெய்யாது நாம் போனால் பெருமையெல்லாம் தலைவர்க்குபோய்விடுமோ  வென்று பயந்தே பொய்க்காது  பொழிந்தன!மாறிய    காலத்தில்   மக்களும்    தலைவர்களும்பொது நலந்தன்னை புதைகுழியில் அமிழ்த்திவிட்டுதன்குடும்பம்  தன்உறவு  தனக்கே   எல்லாமென்று ஊரையடித்து   உலையில்   போட்டாக்கித்  தின்ன பார்த்த   மேகங்கள்   பரிதவித்து    மனம் வருந்தி இப்படியே இவர்கள் வாழ இனியும் நாம் துணை போகாமல்அழித்திட   வேண்டுமென்று    ஆழிப்     பேரலையாய் கோபக்  கனலிலே  கொந்தளித்து   உலகழிக்கும்!மழைநீர்தான் எல்லாமும்! மழையின்றி உலகத்தில்உயிர் வாழ முடியாது!   உணவும்    தழைக்காது!பசிபோக்கும் மாமருந்தின் பாங்கான கலவையிது!புல்லும்  பூண்டும்  புவிவாழ்வின்  அத்தனையும்துறவும்    வாழ்வும்   சுகமான    இல்லறமும்விழாக்கள் தோரணங்கள் வீதியெங்கும் களைகட்டஎன்றைக்கும் அடித்தளமாய் இருந்திலங்கும் மழை நீரேஉன்னை வணங்காது உலகத்தில் ஏது   வேறு தவம்!?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com