மழை நீர் போல்: ஷஹீ ஸாதிக்

மழை நீர் போல்...!
சூழ்ந்த மழை போல
ஆழ்ந்த இறைச்சல் ,
நேர்ந்த கனாவில்
வீழ்ந்த மழைத் துளிகள்.
ஆய்ந்த இளமைக்குள்
பாய்ந்த சிதறல்கள்
காய்ந்து கறை படிந்த
காதோர இன்னிசைத் தூரல்.

வாய்த்த மேகக் குடை
தோய்த்த வெந்நிலா வடிய,
வெய்துயிர்த்துக்கொண்டு
மெய் சிலிர்க்கும் பெண்மை...!

தலைகீழ் மூடிய
கண்ணாடிக் குமிழ்புகுந்த
தளம்பலில்லா காற்றுத்தாவளம்.
ஊர் கேட்காதடி என்
அரவம்...
தூறும் மழை தான் நித்திரை
மெளனம்.

சண்டமாருதச் சக்கை
எல்லாம்,
சுவர்மூடி சிறை பிடித்தன.
வெறுமனே வெந்துகொண்டு
சுலபமாக பெய்தது வியர்த்து
வெயில் வெட்டிய
வழலை  நீர் !

வழலையானது;
வெந்து நொந்து
தோளுதலில்
வெள்ளிடை காணாத-என்
உணர்ச்சி!
உணியுள் பெய்கிறது
மழையிங்கு...

காட்சியில் பட்டவை
சாட்சியில் உணர்வு தான்
மழை!
காந்தருவம்
வார்த்துருவம் கொண்டு,
மாரினில் இறந்தது!

தொய்விலே தேடும்
செல்வம்,
பொய்வினை கேடும்
சொல்லும்.
பெய்திடும் மழை நீர் (என)
கொள்ளும்.

காடாக்கினி கொல்லும்
அந்தகாரம்
படைத்துக்கொண்டு
நிம்மதியாய்...
மழை என...

நிரம்பிக்கக்கும்
வானின் தாராள
கோதாட்டு.
காணின் என்
உள்கக்கும்
காயாத கண்
மந்தம்,
எறும்பி மிதித்த
எறும்பு நான்!
எல்லைமறந்த விதி
வில் நீர்குத்தும்
சொல்லொனாப் போராளி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com