மழைநீர் போல:  நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

வான் சிந்தும் மழைத்துளிக்கு
நிறமில்லை! மனமில்லை! சுவையில்லை!
அது தான் சேரும் நிலத்தினைச்சார்ந்து
உவர்ப்போ கசப்போ இனிப்போ
என்று ஏதொவொரு சுவை பெறுகிறது!
கடலில் விழுந்தால் உப்பாகிறது!
செம்மண்ணில் விழுந்தால் செந்நீராகிறது!
களிமண்ணில் விழுந்தால் சகதியாகிறது!
மணலில் விழுகையில் நன்னீராகிறது!

கருவாகி உருவாகி பூமியில் உதிக்கையில்
குழந்தைக்கும் எந்த குணமும் இல்லை!
அதன் உள்ளமொ வெள்ளை!
உயர்வென்றும் தாழ்வென்றும் தீதென்றும் நன்றென்றும்
ஏதோன்றும் அறியாப் பிள்ளை!
வளர்ப்பினாலே சேரும் சிறப்பினாலே
நற்பெயரோ தீய பெயரோ பிற்காலத்தில்
பெறுகின்ற வகையில்
பிள்ளைகளும் ஒருவகையில் மழைநீரே!

மனதினிலே குழப்பங்கள் அகற்றி
நிர்மலமாய் இறைவனை தியானிக்கையில்
பேதங்கள் வாதங்கள் மறைந்திடுமே
கீழென்றும் மேலென்றும்
ஏழையென்றும் பணக்காரனென்றும்
தீயோன் என்றும் நல்லோன் என்றும்
பேதங்கள் பிரிக்காமல் அருள்கின்றவன்
அன்றோ ஆண்டவன்!
குணமின்றி சுவையின்றி, நிறமின்றி
கும்பிட்டவர்க்கும் அருளும் இறைவனும்
மழை நீராய் விளங்குகின்றான்!

மழை நீர் போல மனதினை
நிலை நிறுத்து!
நிர்மலமாய் மனதை செதுக்கு!
நிச்சயமாய் சிறக்கும் உன் வாக்கு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com