மழைநீர் போல: சுஜாதா ஜெயராமன் 

தாய்ப்பாலை விடவும் தூய்மையானது வேறில்லை எவ்வுயிர்க்கும்!  பூமிக்குழந்தைக்கு வான அன்னை அளிக்கும் தாய்ப்பாலே மழைநீர்! தூய்மைதனில் தாய்ப்பாலுக்கு நிகரானது மழைநீர் மட்டுமே! தாய்மையும் காட்டுவது மழைநீர் - விதைகளை உயிர்க்க வைப்பதிலே!மழை நீர் கண்டால் வாடிய பயிரெல்லாம் ஆனந்தக்கூத்தாடும்! மழை நீர் கொண்டால் வற்றிய ஆறும் பெருக்கெடுத்து ஓடும்! தாவரங்கள் இனிமை கொள்ளும்; மயில்கள்  தோகை விரித்தாடும்!காட்டு விலங்குகள் மழை நீர் நோக்கியே  இடம்பெயரும்! புவி மேல் உயிர்க்கு ஆதாரம் நீரே ; அப்புவிக்கே நீர் ஆதாரம் தருவது மழை நீரே! நீர் வற்றினால் உயிரனைத்தும் மடியும்; நீர் ஊற்றினால் உயிர்கள் மீண்டும் துளிர்க்கும்!உலகப்பந்துக்கே உயிர் கொடுக்கும் மழை நீர்  -  இப்புவியினில் மட்டுமே! வேறு எந்தக்கோளிலும் இருப்பதாய் இதுவரை உறுதியாகவில்லை இவ்வுயிர்நீர் !அவனன்றி ஓரணுவும் அசையாது என்பர்! நீரின்றி ஓருயிரும் உயிர்க்காது இப்புவியில்! மழைநீரின்றி அணுத்துளியும் இயங்காது!அத்தனை உயிரும் அணுவால் ஆனது!; அந்த அணுவே துளி நீரால் ஆனது!நீரின்றி அமையாது உலகு - அன்றே வள்ளுவன் சொன்னது! மழை நீரின்றி அமையாது உயிர் - இவ்வுலகே உணர்வது! ஆக,  நீரின்று அமையாது, உலகு, உயிர் -  ஆதலினால் மழை நீர் போல வருமா? மழை நீருக்கு ஏதும் நிகராகுமா? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com