மழை நீரைப் போல:  கவிஞர் " இளவல் " ஹரிஹரன்

மழைநீர்போல் மனம்வேண்டும் தூய்மை யாக       மண்ணுக்குள் இறங்கவேண்டும் நேர்மை யாகவிழைகின்ற மும்மாரி வீழ வேண்டும்       விண்ணோரும் வாழ்த்துவணம் வாழ வேண்டும்உழைப்போர்க்குப் பயனுறவே பெய்ய வேண்டும்       உழவுநலம் சிறந்திடவே உய்ய வேண்டும்அழைத்தவுடன் மழைநீரும் இங்கு வந்தால்       அவனியெலாம் பசுமையது தழைக்கு மன்றோ.நிலமகளும் நெகிழ்ந்திடவே நெஞ்சங் கொண்டு        நிறைமழையே தவறாது சேர வேண்டும்கலைமகளும் கடைச்சரக்காய் வாணி பத்தில்        கண்வைத்த கொடுமையெலாம் மாற வேண்டும்.அலைமகளும் அறிவார்ந்த மக்கட் கையின்        அணிகலனாய்க் கருணையுரு வாக வேண்டும்மலைமகளோ உறுதுணையாய் தன்னம் பிக்கை        மழையெனவே பொழியவேண்டும் வளங்கள் சேர்க்க.மழைநீரைச் சேமித்தால் நிலத்து நீரும்        மறையாமல் ஊற்றெனவே எங்கும் பொங்கும்.மழைநீரோ உழவருக்கே அமுத மன்றோ        மழைநீரால் மண்ணெல்லாம் குளிரு மன்றோமழைநீரில் கப்பலினை விடுங்கு ழந்தை        மகிழ்ச்சியினைத் தூவிவிடும் சாரல் போலே.மழைநீரே உயிரமுதம் உணவின் வித்து        மழைநீரைச் சேமிப்போம் காலச் சொத்தாய்.           

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com