மழை நீர் போல: கவிஞர் கே. அசோகன்

மழைநீர் போலே வாழ்ந்தி ருந்தால்
மனிதனும் மகானாய் மாறிட லாம்!
தழைக்கும் பயிர்கள் வளர்ந்தி டவே!
தண்ணீராய் பூமியில் சேர்ந்தி டுவாய்!

மழலைகள் துள்ளிக் குதித்திட தான்
மழைநீர் பூமியில் விழுந்தி டுமே!
உழைக்கும் உழவன் வாழ்வில் தான்
ஓர்துளியும் அவனுக்கு பொன் தானே!

காதலில் விழுந்தோர் காத்தி ருந்தே
கனமழையில் நன்றே நனைந்தி டுவர்!
ஆதலால் மழையே வந்திடு வாய்
தூதாய் உன்னையும் அனுப்பி டுவார்
தென்றலை உனக்கு துணை யாக்கி
தென்பொதிகை சாரலில் நனை வோமே!
சென்னை யிலோ கழிவுநீரா னாய்!
சொல்லிடுக மழைநீரே சேதியைத் தான்!

பிறந்தஇடம் கடல்தான் என்றறி வோம்!
புகுந்தஇடம் மேகமென சொல்லிடு வாய்!
பிறந்தஇடத்தின் பெருமையைத் தான்
பேணிகாக்க விழுந்தாய்  மழை நீரே!

அறங்கள் குறைந்த  வேளை யிலே
அன்பாக அழைக்க வந்திடு வாய்
அறங்கள் காத்திட உறுதி  யெடுத்தே
அறநூல்கள் நாளும் படித்திடு வோம்!

மழைநீர் மகத்துவம் அதிகம் தான்
மாதா அன்பு  பொழிபவள் நீதானே!
பிழைக்க வழி தேடும் உழவர்கள்
பிழைத்திட வந்திடுவாய் மழை நீரே !

அழைத்து அழைத்தே அலுத்திட் டோம்!
அண்ணாந்து வானத்தைப் பார்த்து விட்டு
அருகில் வாவென்றே ஏங்குகி றோம்!
குழந்தையைப் போல துள்ளிடு வாய்
குளங்கள்  ஏரிகள் சேர்ந்தி டுவாயே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com