மழை நீர் போல: நெல்லைமுத்துவேல் 

அரசியல் பிழைத்து அறம் மாறி உழைத்தும்அரிசியைத் தரும் நல்லுழவன் உயிர் பறித்தும்எல்லோர்க்கும் விலை வைத்து ஏய்த்துச் செழித்தும்ஏழேழு தலைமுறைக்கு சொத்துக்கள் சேர்த்தும்ஆயிரம் கோடிகளைப்  பதுக்கிக் குவித்தும்ஆறடியில் உன்னை அடக்கிப் புதைத்த பின்ஆஸ்தி எதுவும் உன்னுடன் வருவதில்லை அஸ்தி தான் மிஞ்சும் அதுவும் ஆற்றில் கரையும்சுவாசம் நிற்கும் முன் நீ நேசம் கற்றிடுவாழ்க்கை முடிவதற்குள் வாழ முற்படுபிரதிபலனை எதிர்பார்த்துப் பெய்வதில்லை மழைகாரியங்கள் ஆகுமென்று கணித்துக் காய்வதில்லை கதிரவன்மாற்று வேண்டுமென மருகி வீசுவதில்லை காற்றுஉபயோகம் உண்டு என உணர்ந்து ஊறுவதில்லை ஊற்றுவரம் கிடைக்குமென வறுத்தி வளர்வதில்லை மரம்வேளை வருமென்று வியர்த்து விளைவதில்லை மண்பேறு பெறுவதற்காகப்  பெருகி ஓடுவதில்லை ஆறுமனிதன் வியர்க்கையில் செயற்கைச் சிறிதும் இன்றிஇயற்கையாய் வீசும் தென்றல் போலமனிதன் மூச்சு நிலைப்பதற்குப் பேச்சு பிறப்பதற்குவீச்சு குறையாமல் வீசும் காற்றுப் போலமனிதன் தா வரம் என்று கையேந்தத் தேவையின்றிதானே வரம் தரும் தாவரம் போலமரங்களை அழித்து நாம் பிழை செய்தாலும் மாண்புறப் பொழியும் மழை நீர் போலமனிதா....... நீபண்ணிய பாவத்திற்கு பரிகாரம் தேடுபுண்ணியம் அதுவன்றி வேறில்லை ஈடு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com