மழை நீர் போல  அழகூர். அருண்.  ஞானசேகரன்

மழைனீர்போல்  வேண்டுவது  வேறொன்  றில்லை
       மண்ணுலகம்  தழைத்திடுமோ  மழைனீர்  இன்றி ?
விழைந்திட்டு  அழைததாலது  பொழிவதும்  இல்லை
       வீண்விரையம்  ஊட்டாமல்  இருப்பதும்  இல்லை !
அழைக்காமல்  மும்மாறி  பெய்ததாம்  அன்று
       ஆர்செய்தக்  குற்றமதால்  மழையிலை  இன்று ?
பிழைப்புக்கு  என்செய்வார்  மக்கள்  பாவம்
      பெரிதுமாய்  வறட்சியதே  என்றிட்டு  ஆக?

மாட்சிகொண்ட  நீரென்றால்  மழைனீர்  தானே
       மாகடலும்  வற்றாதோ  மழையற்றுப்  போக!
வீட்சிகளும்  ஆறுகளும்  மழையினால்  தானாம்
       விண்ணின்கொடை  மழைதானெ  தாகத்தைத்  தீர்க்கும் ?
ஆட்சியதும்  சிறப்புறவே  நடக்கின்றப்  போதில்
       ஆண்டுமுழுதும்  மழைவுண்டு  என்றிடும்  நூல்கள் !
காட்டாட்சி  எனத்தக்க  ஆட்சியென்  றாகக்
       காணாதே  போய்விடுமாம்  மழையதும்  நாட்டில் !

நீரின்றி  நிலத்தாலே  என்னபயன் ?--- உலகில்
       நிலம்தன்னால்  எதுதன்னை  விளைத்டுமோ ?
வேரின்றி  மரம்மண்மேல்  நிலைத்திடுமோ ?--- பரந்த
       விண்ணின்றி  கோள்களதும்  தவழ்ந்திடுமோ?
சேறின்றிப்  பயிர்களதும்  விளைந்திடுமோ ?--- இரு
       சிறகின்றிப்  பறவைகளும்  பறந்திடுமோ ?
காரின்றி  நீரதனை  எதுதருமோ ? ---அந்தக்
       கருணைதனை  நாமென்றும்  போற்றுவோமே !

உயிர்கள்தனைக்  காக்கவல்ல  உன்னதநீர்  மழைநீரே !
பயிர்விளைக்கும்,  நம்மின்  பசியாற்றூம் ! --- செயற்கையாய்
இன்னதனை  உருவாக்க  இயலாததே  இதன்சிறப்பாம்,
என்னாவோம்  மழையின்றி,  இயம்பு !

மழையில்லை  என்றாக  மக்களில்லை  உயிர்களில்லை,
பிழைக்கவழி  இல்லையிப்  பேருலகில் ! --- தழைத்தோங்க
இன்னதுவே  ஆதாரம் ,  இயற்கையதன்   நற்கொடையாம் !
என்னாளும்  மறவாதே  இதை !

மண்ணுலகில்  மழைனீர்க்கு  மாற்றில்லை  இயற்கைதரும்
தண்ணீரை  சேமிக்கத்  தயங்காதே ! --- விண்பொய்க்க
உயிர்கள்  மடிந்தழியும்,  உலகமதே  வெறிச்சோடும் ;
பயிர்களின்றி  ஆறிடுமோ  பசி ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com