என்ன தவம் செய்தேன்: -ரெத்தின.ஆத்மநாதன்

என்ன தவம் செய்தேன் நான்!இறைவா இவ்வுலகில்மானிடராய்ப் பிறப்பதற்கும் மகிழ்வாய் வாழ்வதற்கும்உறுப்புகளில் குறையின்றி ஓடியாடி உழைப்பதற்கும்நல்ல   குழந்தைகளை   மிக     நயமான  உறவுகளை மனமறிந்து நடந்தொழுகும் மனையாளைப் பெற்றதற்கும்உனக்கே நன்றி சொல்வேன்! உளத்துள் மகிழ்வு கொள்வேன்!நல்ல   நினைவுடனே  மிகுந்த  நாட்டுப்  பற்றுடனேகாந்தியையும் கம்பனையும் களங்கமில்லா வள்ளுவனையும்ஏட்டில் எழுதிவைத்த எல்லாவற்றையும் படித்துணர்ந்துகதைகளெழுதி களிப்புறவும் கவிதையெழுதி இன்புறவும்பாட்டில்  தனை  மறந்து  பக்குவமாய்  வாழ்க்கை  பெற உதவி செய்த உனக்குத்தான் உறுதியாய் நன்றி சொல்வேன்!தவமென்றால் என்னவென்று தக்கார்கள் சொல்லி வைத்தார்!பொய்    பேசாதிருத்தலே   பூலோகத்தில்   பெருந்  தவமாம்!அடுத்தவர்க்கு   உதவி   செய்தல்   அதனினும்  உயர் தவமாம்!தன்னை  நம்பியோரைத்  தனக்கு  என்றும்    உதவினோரைவாழும் வரை  உளத்துள்ளே வாழ்த்தி  அவர்  நலம் பெறவேநாளும்   நினைந்தொழுகும்   நல்லவரே   பெருந் தவ சீலர்!உண்மையே  உதிரமாய்  உடம்பெல்லாம்  ஓட வேண்டும்!நன்மைதனைச் செய்திடவே நாளெல்லாம் வாழ வேண்டும்!பிறந்து  வாழ்ந்ததற்குப்  பேருலகில்  நம்    நினைவாய்மக்கள் அனைவரும் மகிழ்ந்து நமைப் பாராட்டும் விதமாககண்டு  பிடிப்பொன்றைக்  கவனமுடன்   நாம்  செய்தால்நம் வாழ்க்கை தவமாகும்!நாடெல்லாம் நம் நினைவாகும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com