என்ன தவம் செய்தேன்: கவிஞர் கே. அசோகன்

பல்வேறு மலர்கள் மலர்ந்  தாலும்பூங்காவின் அழகு கூடும் தானேபல வண்ணங்களில் கண் களைப்பறிக்கும் வானவில் அழகு தானேபல்வேறு மொழிகள் பேசி னாலும்பாரத த்து பெருமை காத்திடத் தான்எல்லோரும் கரமிணைக்க தவம் என் செய்தனரே இம்மண் ணிலே!         ஓடையிலே துள்ளும் மீன் களெனஓடியாடி உழைத்து மீண்ட பின்னேகோடையில் வீசுகின்ற காற்ற தனில்கண்மூடி கிடப்பதும் தவப்பயன் தானே!ஆடைப் பக்கிரியாய் அலைந்தே தான்அன்றே சுதந்திரத்தை வாங்கி தந்தநாட்டுப்பிதா காந்தி தவப்பயன் தானே! வேட்டு முழங்கிய வெள்ளை யனும்விரும்பி சென்றதும் தவப்பயன்தானே!நல்வளங்கள் கிடைக்கின்ற பூமி தனில்நாம் பிறந்த்தே நல்ல தவப்பயன்தானே!எல்லையிலே இமயமும், இறுதி யிலேஎழில்கொஞ்சும் குமரிக் கடலும் தான்நல்பாரதமும் பிறந்த நாமும் தான்நல்ல தவப்பயனில் விளைந் தனவே!நில்லாது ஓடுகின்ற கங்கையும் தான்நீள்காவிரி சேர்ந்தால் தவப் பயனுமாமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com