என்ன தவம் செய்தேன்: கவிஞர் ராம்க்ருஷ்

புரியாத புதிராகப் புல்லாகிப் பூண்டாகி மலராகிபரியாகி இன்னும் பலவான உயிர்ப் பிறப்பில்அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் என்றிருந்தும்அரிய மனிதனாய்ப் பிறக்க என்ன தவம் செய்தேன்தித்திக்கும் தமிழ் படித்து உயிர்மூச்சு இனித்திடஎத்திக்கும் மணக்கும் கவிதைகள் எழுதி எழுதியேசித்திக்கும் இன்பப் புகழ் மணக்க எங்கும் சென்றுஒத்திசைவாய் உயரம்பெற என்ன தவம் செய்தேன்இல்லறம் நல்லறமாவது இனிய இல்லக்கிழத்தியாலேசொல்லன்பில் சுகித்திட அன்பு அனுசரிப்பாய் அவளேபுல்லரிக்கும் புனித உறவாளே எனை ஆட்கொண்டாளேநல்லறம் ஈன்ற அவளைப் பெற என்ன தவம் செய்தேன்செய்யும் தொழிலே தெய்வம் என உழைப்பிலாகியேபெய்யும் மழையான அன்பில் கூட்டாளிகள் பெற்றுஉய்யும் துன்பம் அறியாது கூடிப்பேசி  களிப்பாகியேமெய்யும் மனமும் இன்புற என்ன தவம் செய்தேன்பேணி வளர்ப்பதில் பெரும்பங்கு வகித்தாள் மனைவிவேணியாய்க் குழந்தைகளை அன்பால் போர்த்தியேஞானியாய் அவரை வெற்றியெனும் கரை சேர்த்தாள்தேனியாய் அவளைப் பெற நான் என்ன தவம் செய்தேன்தந்தை தாயைக் கொண்டாடும் அன்புமிகு மகவுகள்எந்தை எந்நோற்றான்கொல் எனச் சொல்லும்படியாய்சிந்தை கவர்ந்து சிறப்பான செயல்கள் பல புரிந்தேவிந்தை விழிகள் விரிப்பாக என்ன தவம் செய்தேன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com