பெண் எனும் பிரபஞ்சம்: கவிஞர் ஆ.க. முருகன் 

ஏதோ 
ஓர் ஊரில் 
யாருக்கோ மகளாய் பிறந்து.... 
ஊர் பெயர் தெரியாத 
ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு....

பிறந்த மண் மறந்து,
பெற்றத் தாயை மறந்து,
வளர்த்த தந்தையை மறந்து,
வாழ்க்கையைத் தேடி,
வளர்ந்த ஊர் மறந்து,
வாழ்க்கைப்பட்ட மனை தேடி 
வாழப்போகும் இவள்......

மாமனார்,  மாமியிடம்,
கணவன், கொழுந்தனிடம் 
சொல்லடிப்பட்டு 
சொந்த வாழ்க்கையை 
தொடங்குவாள்...., இவள்......

மலடி பட்டத்தை 
மறுதலிப்பு செய்வதற்கு 
காலமெல்லாம் 
காத்திருந்து 
கருவுருவாள் இவள்.....

மசக்கையின் மயக்கத்தில்,
பத்தியமாய்....பட்டினியாய்,
பாத்து மாதம் சுமந்திருந்து 
உடல் கிழித்து 
உனை ஈன்று,
ஈ, எறும்பு கடிக்காமல் 
இரவும் பகலும், 
என்றென்றும் 
பார்த்திடுவாள் இவள்....

உனக்கு,
பசி எடுக்கும்போதெல்லாம்  
இரத்தத்தைப் பாலாக்கி,
தசை பிசைந்து 
பால் கொடுத்து 
மடி மீது உனைப்போட்டு 
மல்லாக்கப் படுக்கவைத்து 
மார்பில் தடவி விட்டு 
உன் ஏப்பத்தை 
எதிர்பார்க்கும் ....
எந்த 
எதிர்பார்ப்புமில்லா தாய், இவள்....

நீ 
பிணியுறும்போதெல்லாம்,
கண் விழித்து......
தன் உடல் வருத்தி, 
பால் எடுத்து,
மாத்திரையை அதில் கலக்கி 
கால்களால் 
கால் அமுக்கி,
கைகளால் 
கை அமுக்கி,
மூக்கை பிடித்துக்கொண்டே...
கடிய மருந்தூற்றிடுவாள் இவள்....

அப்பாவை, மாமாவை....
காட்டி உனை பேசவைப்பாள்....
மழலைச்சொல் அவள் கேட்டு 
மனமெல்லாம் பூரிப்பாள்.....

மழலை மொழிக்கேட்டு 
மலைத்துப்போகாமல் 
காது தொட - கை 
வளர்ந்தவுடன் 
பாங்குடனே சேர்த்திடுவாள்.... பள்ளியிலே !
நீ 
பள்ளி செல்லும்போதெல்லாம்....
பரவசம் அடைந்திடுவாள், இவள்....

நீ
படித்து மேதையாகி 
பட்டினம் போனவுடன் 
சேர்க்காதே இவளை 
ஒரு - முதியோர் 
இல்லத்தில் 
தாயான இவள் - வெறும் 
பெண்ணல்ல - "பெண் எனும் பிரபஞ்சம்" !!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com