பெண் எனும் பிரபஞ்சம்: திருமலை சோமு

பெண்ணே நீ
பிரபஞ்சத்தின் 
பேரொளியாய்
பிறந்ததனால்..

நிலமும் நீரும்
நிலவும் கூட
நீயென்று ஆனாய்..!

கடலெனும் கன்னி
கரையில் ஆட
காவியப் பெண்ணை 
மொழியினில் தேட
ஏட்டிலும் எழுத்திலும்
போற்றி நாம் வைத்தோம்..!

நாட்டினில் நடப்பதை
நயமாய் ஏனோ மறைத்தோம்..1
    
பெண்ணே நீ
பிரபஞ்சத்தின் பேரொளியாய்
பிறந்ததனால்..

உன் கருவிலோர் உலகம்
உருவாகும் அழகும்
நிகரில்லா நிஜமே..!

புவியாளும் மன்னன்
கவியாளும் கம்பன் - போல்
பேரறிஞர் யாராகினும்
நீ தந்த வரமன்றோ..!

ஒளியாய் மொழியாய்,
நதியாய் கடலாய்
மலராய் மழையாய் - என 
இப்பிரபஞ்சத்தில் யாவுமாய்
நிறைந்தவளே பெண்..!

பெண்ணே நீ யில்லா
பிரபஞ்சம் ஏதுக்கடி..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com