பெண் எனும் பிரபஞ்சம்
கருவிலே உயிராக்கி
கல்லறையில் பிணமாக்கி
வாழ்வில் மனிதனாக்கி
மனிதனை மிருகமாக்கி
மிருகத்தை கடவுளாக்கி
கடவுளை பேயாக்கி
பேயை உயிராக்கி
ஆக்கியதை அழித்து
அழித்ததை ஆக்கி
முடிவை முதலாக்கி
முதலை நட்டமாக்கி
நட்டத்தை இலாபமாக்கி
இலாபத்தை தொழில் ஆக்கி
அனைத்தையும் ஆக்கி
அனைத்தையும் அழித்து
மண்மேல் நின்று
மனம்மேல் நின்று
பொன்மேல் நிற்க வைத்து
மண்ணுள் புதைப்பாள் !