பெண் எனும் பிரபஞ்சம்: ​கவிஞர் பி.மதியழகன்

அண்டமே பிண்டமாய் கொண்டு அணுக்களை
உயிர் அணுக்களாய் உலகுக்கு கொடையென
தரும் உன்னதமான பிரபஞ்சத்தின் கடவுளாய்
நம்கண்முன்னே வாழும் தேவமகளேஎன்றும்
ஆதியாய் அந்தமாய் சோதியாய் வடிவானவள்

இடியும் மின்னலும் மழையும் காற்றென
எதையும் தாங்கிடும் பூமா தேவிபோல
வறுமை கொடுமையோ வாழ்வோ தாழ்வோ
அனைத்தும் அறிந்த ஒருவளே அழுகின்ற
குழந்தைக்கே அறுசுவை உணவு தருவாள்
அம்மாயெனும் அழியா அன்பின் பிறப்பிடமே

ஒளிர்கின்ற சூரியனால் ஒளிபெறும் பிரபஞ்சம்
மொழியென்ற அறிவுச்சுடரை ஒளிரச் செய்யும்
முதல் குருவானவளே பிள்ளையை ஈன்றவள்
பிள்ளைகள் தொல்லைகள் தந்தாலும் பேதம்
என்றும் இல்லையே பெற்றவள் நெஞ்சத்தில்

குடும்பம் சிறக்க சிறைபட்ட பறவைபோலவே
சிந்தை பறக்கவிடாமல் சிற்றின்பம் தருபவளே
தந்தையின் தவிப்பினை அறிந்திடும் அன்னையே
பிரபஞ்சத்தின் பஞ்ச பூதங்களையும் மொத்தமாய்
தன்னுள் கொண்ட உமையவளின்திருவுருவமே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com