முத்துக் காள முட்டும் ஆள...
மச்சானோட ரெட்டக்காள...
ஜல்லிக்கட்டு மாமனோட...
மல்லுக்கட்டும் மச்சக்காள...!
வண்டி கட்டி போகையிலும்..
சண்டித்தனம் ஏதுமில்ல...
பாடு படும் பாட்டாளிக்கு...
பக்க துணை இந்தக் காள!
மாரி மழை பேயக்கண்டு...
ஏறு உழும் காள ரெண்டு...
பொன்னு தரும் பூமிதான்...
தந்தா கரு மாரிதான்...
வண்டிக்காரன் வாழ்க்கையில
காள ரெண்டும் சாமிதான்...இந்த
வண்டிக்காரன் வாழ்க்கையில
காள ரெண்டும் சாமிதான்.