அழகூர். அருண். ஞானசேகரன்

இன்றையப்  பெண்களுக்கு  தாலாட்டுப்  பாட்டுக்கள்           இருப்பதே  தெரியாதாம்  என்பதே  உண்மை!அன்றுநாம்  எல்லோரும்  தூளிதனில்  தூங்க           அன்னையர்கள்  பாடினர்  இனிதானப்  பாட்டை!இன்றுநாம்  தூளிதனைக்  காண்பதரி  தாச்சு           எல்லாமும்  திரைப்பாடல்  என்றிட்டும்  ஆச்சு!நன்றானத்  தூக்கம்வரும்  தாலாட்டைக்  கேட்க,            நயமான  இசையதனின்  மகிமையதும்  அதுவே!பெண்களுக்குப்  பெருமையெலாம்  தாயென்று  ஆதல்,           பேருண்மை  இதுதன்னை  உணர்ந்திடா  திருந்தேமண்ணாள  வந்திட்ட  அல்லிதனைப்  போல           மணம்வேண்டாம்  என்கின்றார்  ஒருசிலர்  இன்று!கண்ணுக்கு  இனிதானக்  குழந்தைகளைப்  பெற்று           கருத்துடன்  வளர்ப்பதன்றோ  இனியநற்  பேறு?உண்மையிதை  உணரட்டும்  படித்திட்டப்  பெண்கள்,           உற்றநற்  சுற்றமெலாம்  போற்றிமகிழ்  வெய்த!இனிமைக்கு  இலக்கணமாம்  தாயவளின்  பாட்டு           இனிதானத்  தாலாட்டு  என்பததன்  பெயராம்!கனிவுடனே  அன்னையவள்  பாடுவதைக்  கேட்டு           கண்ணுறங்கும்  மழலையதும்  தூளிதனை  ஆட்ட !புனிதம்மிகு  பேறன்றோ  அனனையென்  றாதல்,           புவிதன்னில்  பெண்ணெனப்  பிறந்தநற்  பேறு!மனிதகுலந்  தனிலின்றும்  தாய்மைக்கு  இணையாய்           மாற்றுதனைக்  காண்பதும்  அரிதான  ஒன்றே!தொங்குகின்றத்  தூளிதனில்  தூங்கவேண்டி  குழந்தைக்குஇங்கிதநற்  குரல்தனிலே  இசையோடு -- மங்கையர்கள்பாட்டுதனைப்  பாடிடுவர,   பச்சிளங்  குழந்தையதைக்கேட்டறங்கும்  காலமெங்  கே?தாலாட்டின்  இனிமைக்குத்  தக்கதோர்  இணையில்லை;காலத்தால்  மறந்திடுமோ  கருத்ததுவும்? -- சேலைத்தூளிதொங்கும்,  அதில்மழலையை  தூங்கவைக்கும்  காட்சிதனைஎங்கேநாம்  காண்போம்  இனி?                    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com