அவசர இயந்திர உலகில் அன்னையின் பணிச்சுமையில் இடம் பெறாதது இன்றைய தாலாட்டு!பூட்டி,பாட்டி,தாய்சீராட்டிய தாலாட்டைமறந்து போனதே இன்றைய தாலாட்டு! தாயின் தாலாட்டுக்கு மாறுதலாய் வந்தது கணினி, அலைபேசியின் மென்பொருள் தாலாட்டு! பழந்தமிழ் நூல்களில், பழந்திரைப்படங்களில்,தேடியெடுப்போம் காணாமல் போன இன்றைய தாலாட்டு! மின்னணுக்கருவிகள், தாலாட்டு இசையையும்,தாலாட்டுப் பாடலையும், குழந்தைக்கு கொடுக்கலாம்!பாசத்தை, நேசத்தை கொடுக்க முடியுமா?அன்னையரே!கருவிகளையும்,கருவியின் ஒலிகளையும், அணைத்துத் தூங்கும் குழந்தைகளுக்கு,ஈடு இணையில்லா தாய்மை அணைப்பையும்,அன்பு மீட்டும் இசையையும் இடை இடையே தந்து மானுடம் காப்பீர்!