இன்றைய தாலாட்டு: கவிஞர் பூ.சுப்ரமணியன்

இன்று 
பாலூட்டத் தயங்கும் பெண்கள்
தாலாட்டுப் பாடி  குழந்தை 
தொட்டிலை ஆட்டுவார்களா ?!
தாலாட்டும் 
செயல் ஒருவிதம்
பாடல்களோ பலவிதம் !

குடிசையில்... 
‘குடி குடி கெடுக்கும்’
குடிகார உன் அப்பன் 
அறிவுக்கும் எட்டாது 
அரசுக்கும் புரியாது ! 

குடித்துவிட்டு
அம்மா அடிபட்டு 
அலறுவதைக் கேட்கும்
முன்னே கண்மணியே 
அசந்து கண் உறங்கு !

மாளிகையில்.... 
பரிசுப் பொருள் 
ஸ்மார்ட் போனோடு 
தாய் மாமா வருவாரு
சுட்டிப் பையா கைபேசியை   
கட்டிப்பிடித்து கண் உறங்கு!

வாட்ஸப்பில்
அழகிய உன் முகம் 
உலகமெல்லாம் தெரியும்
அம்மா செல்லமே  
அசந்து கண் உறங்கு ! 

நாட்டில் ...
சுயநலப் பேய்களோ
பணம் பதவி சுகம் காண  
நீதி நேர்மை மனிதநேயம்
விரும்பும் மக்களை 
தாலாட்டுப் பாடி
தூங்க வைக்கிறார்கள் !  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com