இன்றைய தாலாட்டு: கே.நடராஜன்

தொட்டில் கட்டி  தாய் பாடும் தாலாட்டு 
கேட்டது ஒரு தலைமுறை !
தொட்டில் என்றால் என்ன என்று 
கேட்குது இன்றைய தலை முறை !

தொலைகாட்சி பாட்டுக்கு தலை 
ஆட்டும் இந்த தலைமுறைக்கு அன்னையின் 
தாலாட்டு ஒரு புதிர் விளையாட்டு !

வேலை வேலை என்று ஆலாய் 
பறக்கும் பெண்ணுக்கு  தாலாட்டு 
பாட எங்கே நேரம் ?

மடிக்கணினி இசைக்கும் இசையே ஒரு 
குழந்தை கேட்கும் இன்றைய தாலாட்டு !
அம்மா அப்பாவின் கைபேசி 
மணிஓசைதான்  தாள வாத்திய கச்சேரி 
மடியில் தவழும் குழந்தைக்கு !

இன்றைய குழந்தை  கேட்கும் 
ஒரே தாலாட்டு  அதன் அம்மா அப்பா 
பாடும் ஒரே பாட்டு ..."எடுக்க வேண்டும் 
எல்லா அடையாள அட்டையும் நம்ம  குழந்தைக்கு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com