இன்றைய தாலாட்டு: பாவலர் கருமலைத்தமிழாழன்

ஆரிரரோ  ஆரிரரோ   ஆராரோஆராரோ  ஆராரோ  ஆரிரரோகண்ணுறங்கு  கண்ணுறங்கு  என்மகனே    கவிதையினைக்  கேட்டுறங்கு  என்மகனேமண்ணிலின்று   பெருகிவிட்டக்   கயமைகளை    மாற்றவேண்டும்  நீவளர்ந்து  என்மகனே!                  கண்ணுறங்குவளர்ந்திருந்த   மரங்களினை  வெட்டிச்சாய்த்தார்    வாழவைக்கும்   காற்றுதனில்  மாசைச்சேர்த்தார்களம்நிறைத்த   வயல்களினை  விற்றுத்தீர்த்தார்    கரைதழுவி  பாய்ந்தஆற்றில்  கழிவுகலந்தார்               கண்ணுறங்குவிண்ணிலுள்ள   ஓசோனை   ஓட்டைசெய்தார்    வீதிகளைத்  தீயாகக்   கொதிக்கவைத்தார்கண்போன்ற   மலைகளினைப்  பிளந்தழித்தார்    கசியாமல்  மேகத்தைக்   கலையவைத்தார் !              கண்ணுறங்குநெஞ்சினிலே   தன்னலத்தை   நிரப்பிவைத்தார்    நேர்மைக்குச்  சாவுமணி  அடித்துவைத்தார்வஞ்சகத்தால்   பிறர்வாழ்வைக்   கெடுத்துவைத்தார்    வார்த்தைகளில்   நஞ்சுதனைச்  தடவிவைத்தார் !         கண்ணுறங்குஆட்சியிலே   அமர்ந்தவர்கள்   கொள்ளையடித்தார்    அறிவுதரும்   கல்விக்குக்   கடைவிரித்தார்நாட்டினிலே   சாதிமதம்   வளர்த்துவைத்தார்    நாளெல்லாம்   கலவரத்தில்   உயிர்பறித்தார்!             கண்ணுறங்கு        அழிக்காமல்   இயற்கையினைக்   காக்கவேண்டும்    அறிவியலை  நன்மைக்காய்   ஆக்கவேண்டும்விழியாக   மனிதத்தை   வளர்க்கவேண்டும்    வீண்பகைமை   வேற்றுமையைக்  களையவேண்டும்!    கண்ணுறங்கு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com