இன்றைய தாலாட்டு: ராம்க்ருஷ்

ஆராரோ ஆரிரரோ என பாடிய தாலாட்டெல்லாம்
நீராரோ நினைவிலாரோ என காதல் பாட்டாகி
பேரேதோ பெரிய பணக்காரரோ என இழுத்தே
நேராக நிகராக முன்னேறும் தாலாட்டானதே

சினிமாப் பின்னணி பாட்டு போலே அலைபேசி
தனிமையில் பாட வாயசைக்கும் தாயார்களாய்
இனிமைகூட்டி தொட்டிலாட்டும் தாலாட்டாய்
கனிரசம் கொட்டும் தேனிசையாய் மாறியதே

சேலையில் து|ளி கட்டிப் படுத்துறங்கிய குழவி
ஆலையில் செய்த தொட்டிலிலே படுத்துறங்க
காலையில் தாலாட்டு ஆளில்லாமல் நடந்திட
மாலை இரவாகியதும் உறக்கத்திலென்றானதே

நாவலாய் ருசியாய் இருந்த பழைய தாலாட்டு
காவலாய்ப் பணிப்பெண் கையில் சென்றதாலே
கூவலாய் இடைவெளியிட்டு அவ்வப்போதாய்
சேவலாய் ஒரு பக்கக் கதைகளாகிச் சுற்றியதே

தாலாட்டும் குறைந்து தோளாட்டலாய் தட்டலாய்
மேலாட்டலாய் மேனியே தொட்டிலாகியதே
தாலாட்டலாய் சில நேரம் அலைபேசியானதே
தாலாட்டில் சொல்லும் கதைகள் மறைந்துபோனதே

இன்றைய தாலாட்டில் பாலருந்தும் குப்பியின்
கன்றாயிருக்கும் உறிஞ்சானின் பங்கே பெரிதாய்
என்றும் யாருக்கும் துன்பமின்றி தூங்கச் செய்திட
நன்றாய்ப் போகிறது நலமாய் இன்றைய தாலாட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com