கல்லறைப் பூவின் கண்ணீர் துளி: ஆபிரகாம் வேளாங்கண்ணி

உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு
என் மீது அன்பு கொண்டவளே
நமக்கு இடையில் தடையாய் நின்ற
தடையை தகற்க உனக்கு வந்த இந்த
உன் தைரியம் உன்னை கல்லறை வரை
கொண்டு சென்றுவிட்டது

எனக்கு
அந்த உன் தைரியம் வந்திருந்தால்
நெஞ்சில் துயரத்தை சுமந்து நான்
உன்னெதிரில் நிற்பதற்கு பதிலாக
உன்னை தூக்கிச்சென்று வாழ வைக்க
வழி வகையை செய்திருப்பேன்

ஏழையாய் வாழ்வதில் தவறில்லை
கோழையாய் வாழ்கின்ற  வாழ்வு
பாழை சந்தித்தே சாகவேண்டும்
உன்னை இழந்தப்பின் யோசிப்பதில்
ஒரு பயனும் இல்லை அறிவேன்

உன்னை புதைத்துவிட்டு எல்லோரும்
போனப்பின்னே தான்
என்னால்
உன் கல்லறையை கூட நெருங்கவே
முடிந்தது என்பதை நீ அறிவாயோ

பனி படர்ந்தது போல் உந்தன்
வண்ண "கல்லறைப் பூவில்
கண்ணீர் துளி" ஒவ்வொன்றும்
மூன்றாம் நாள் நான் ஊற்றும்
பால் என கொண்டுவிடு
ஆன்மா சாந்தி பெற ...!!
உன்
நினைவாலே என் காலம் செல்ல...!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com