கல்லறைப் பூவின் கண்ணீர்த் துளி : -பெருமழை விஜய்

கல்லறைதான் வாழ்வின் கடைசிப் புகலிடமாம்கடைசிப் புகலிடத்தில் காத்திருக்கும்  பூ நான்!காத்திருக்கும் பூ நான்  கடவுளிடம் சென்றதில்லை!கடவுளிடம் சென்றதில்லை கண்ணியத்திற்குக் குறைவுமில்லை!கண்ணியத்திற்குக் குறைவுமில்லை கடவுள்தானே இறந்தபின்னால்!கடவுள்தானே இறந்தவர்கள் கடனறிந்து வாழ்ந்திருந்தால்!கடனறிந்து வாழ்ந்தவர்கள் கவினுலகில் மறைவதில்லை!கவினுலகில் மறையாமல் காவியமாய் நிலைத்திடுவர்!காவியமாய் நிலைப்பவர்கள் நெஞ்சினிலே நானிருப்பேன்!நெஞ்சினிலே அமர்கையிலே கண்களிலே நீர் கசியும்!நீர் கசியும் கண்களுடன் நின்றிடுவேன் பிரமித்தேபிரமித்து நான் நின்றால்  பிணத்திற்குப் பெருமையுண்டு!பிணத்தின் பெருமையினை பின்வரும் உறவுணர்த்தும்!உறவுகள் கூட்டமாய் ஒன்றாய் சேர்ந்து வருவர்!ஒன்றாய் சேர்ந்து வந்தால் உதிர்ந்தவர் உண்மையானவர்!உண்மையானவர் உதிர்கையில் உதிர்த்திடுவேன் கண்ணீரைஉதிர்க்கும் கண்ணீருக்கு உள்ளுண்டு இரண்டு காரணம்!இரண்டு காரணத்தில் ஒன்று அவர் இன்னும் வாழ்ந்திருக்கலாம்!வாழ்ந்திருக்க வேண்டியவர் வந்திட்டார் ஆனாலும் பலர் இங்குபலர் இங்கு வீணே வாழ்கின்றார் வெந்திடுது நம்முள்ளம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com