கல்லறைப் பூவின் கண்ணீர்த் துளி: கவிஞர். கா.அமீர்ஜான் 

அகாலத்தில்
ஒதுக்கப் பட்டதான மரணங்களின்
ஜனன மயானத்தில்
யாருமற்ற
தனிமையென இல்லாமல் நிரம்பி
வளாகமிட்டுக் கொண்டிருந்தது
கல்லறைத் தோட்டம்...

பிரமாண்டமற்றதில்
விவரம் புரியாமல் நொந்து கொண்டிருந்த
சோகத்தின் மிச்சமாய்
அடையாளப் படுத்திக் கொண்டிருந்தது
அது...

நிழல் தேடும்
கூரை வேயப்படாத வெளியில்
கூடியிருந்தன
கூடுகளாய் கல்லறைகள்...

உயிர்த்தலில் இருந்த போது
நிகழ்ந்த
புறத்தின் பட்டியல் நீண்டு
கிடக்கின்றன ஒட்டியும் ஒட்டாமலும்
முரண்களாக...

காதலோ
சாதியோ
மதமோ
மொழியோ
இனமோவென
எதனையும் மீறியதை இருக்க
விடாமல்;

எதுவும்
புதைக்கப் பட்ட மண் வயிற்றில்
மரணங்களின் அவலம்
ஜனித்துக் கொண்டிருந்தன...

உயிர் வாழும் போது
பேத பெருவெளி துக்கங்ளோடு
கொஞ்சம்
எட்டிப் பார்க்கும் இன்பங்களின்
மிச்சங்களோடு
சம்பாஷித்துக் கொண்டிருந்த
சஞ்சலமெல்லாம்
சயனித்துக் கொள்ள முடியாமல்
இருந்து கொண்டிருந்தன கல்லறைக்குள்
துயரங்களின் அவஸ்தைகள்...

தனியே கிடப்பதிலிருந்து
தானே முளைத்துக் கொண்டு
ஆறுதல் அளித்துச்
சொட்டிக் கொண்டிருந்தன,
கல்லறைப் பூவின் கண்ணீர்த் துளி;
ஒவ்வொரு சோகத்தையும் முன் வைத்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com