விடுதலை:  கவிஞர் கே. அசோகன்

பொன்னாக கூண்டுதான் இருந் தாலும்
பூட்டிவைத்த கிளிகளும் பறந்தே சென்று
நன்றாக தழைத்துள்ள மரமும் தேடி
நெகிழ்வுடனே இருந்தாலே விடுதலை தான்!
கண்விழியின் ஓரத்திலே வழிந் தோடும்
கண்ணீரும்  சோகத்தின் விடுதலை யாம்!
விண்ணிலே தவழ்ந்தோடும் மேகத் திலே
விடுதலையில் காண்போமே மழையும் தான்!

அணைத்தேக்க மதகுகளின் அடி வாரத்தில்
ஆர்ப்பரிக்கும் நீரின்வேகம் விடுதலையே!
கணையாக செந்தமிழில் பாடல் இயற்றி
கவிவேந்தன் பாரதியும் ஓங்கி முழங்கி
துணையாக இருந்திட்டான் விடுதலைக்கே!
தோள்மீது கதர்துணியை சுமந்தே காந்தியும்
தேசத்தின் நலன்காக்க வீதி யெங்கும்
திரிந்துதான் விடுதலையை வாங்கி தந்தார்!
        
பெண்களது துயரத்தை எண்ணி தானே!
பீடுநடை போடவே பாரதியும்  பகன்றான்!
பெண்கள்தான் வாழ்க்கையின் கண்க ளென்றே
பாடல்களில் விடுதலை வேண்டு மென்றான்!
தண்பொழியும் சோலையில் கொஞ்சு கின்ற
தாய்ப்பறவை கற்றுத்தரும் பாடம் கூட
விண்ணிலே சுதந்திரமாய் பறப்ப தற்கு     
விடுதலையாய் எண்ணியே மகிழ்ந்து டுமே!                     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com