" விவாத மேடை முதல்
அரசியல் அரங்கம் வரை
எழுச்சி காட்டும் வீர
மங்கை "
" விமானம் முதல் விண்வெளி
வரை சாகசம் காட்டும்
வீர மங்கை "
" முதல்வர் பதவி முதல்
பிரதமர் பதவி வரை
சாதனை காட்டிவரும்
வீர மங்கை "
" படைப்பாளிகளாய்
பத்திரிக்கை ஆசிரியர் வரை
வளர்ச்சி பாதையில்
வீர மங்கை "
" விஞ்ஞான வளர்ச்சியில்
எதிர்கால தேடலில்
அக்கறை காட்டும்
வீர மங்கை "
" காதல் பண்பாடு கலை
கலாச்சாரம் இவைகளுக்கு
விதை போடும் வீரமங்கை "
" ரணகளத்திலும் தாய்மை
தாரம் வீரம் விவேகம்
பொறுமை கடமை மென்மை
நிரூபிக்கும் வீரமங்கை "
" உலகம் சுழல நல்வழி
தேட சுகமும் இன்பமும்
கூட எந்நாளும் நம்பிக்கை
நட்சத்திரம் வீரமங்கை "