வீரமங்கை: கவிஞர் கே. அசோகன்

பழமுறத்தால் புலியை துரத்தி யடித்த
பெண்ணு மானாள்! வீரமங்கை! அன்றே!
அழகுமட்டும் அணிசேர்க்கு மென என்றே
ஆவலாய் இருந்திடாது என்றென் றுமே
பழகுதமிழில் பாடல்களை இயற்றி தானே
பாட்டதனில் ”ஆரையடா சொன்னாய் அது”
ஒழுங்காக மதிப்பளி ! ஓங்கிகுரல் கொடுத்த
ஔவயாரும்  மண்ணில்  வீரமங்கை யே!

பார்போற்ற பாரதத்தை ஆட்சி செய்து
பாரதத்தின் பெருமையை பறை சாற்றிய
நேருதந்த தவப்புதல்வி அன்னை இந்திரா
நாட்டினிலே வலம்வந்தார் வீர மங்கையாக !
கார்குழலை முடிந்திடாது முன்னே நிறுத்தி
கள்வனில்லை கணவ னென்றே உரைத்த
சீர்வணிக மரபினினர் குலத்தி லுதித்த
செழுந்தமிழ் தந்திட்ட கண்ணகி என்போமே!

பைந்தமிழில் பாட்டுக்கள் வடித்த தந்த
பாரதியின் செல்லாமாவும் வீர மங்கையே!
கையளவு துணியுடுத்தி அறப்போர் செய்த
காந்தியின் கஸ்தூரிபாவும்  வீரமங்கையே!
வைத்தியத்தில் அக்கறையை தாமே செலுத்தி
வலம்வந்த முத்துலட்சுமியும் வீர மங்கையே!
கைத்தடியை கொண்டேதான் நடை போட்ட
வெண்தாடிபெரியாரின் துணை வீரமங்கையே!

மனந்தனிலே துணிவை ஏற்றுக் கொண்டு
மாளாத துன்பமும் வந்த போழ்தும்
சினத்தினையே உள்ளத்தில் தேக்கி வைத்து
சீர்பாதை செல்பவளும் வீர மங்கையே!
கனவுகள் வருகின்ற பருவ காலத்திலும்
கற்பனையில் மூழ்கியே இருந்து விடாது
நனவுலகில் சாதனைகள் நிகழ்த்தி காட்டும்
நங்கைகள் என்றும் வீரமங்கை யாராமே!
                    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com