நிழல் தேடி: அழகூர். அருண். ஞானசேகரன்

நிழலதனை  நிஜமென்றே  நம்புபவர்  பேதை,         நீசர்கள்  பரிசாகக்  காண்பதெலாம்  உபாதை !விழலுக்கு  நீர்பாய்ச்சி  ஓய்பவர்கள்  மோழை,         வீணாக  மணல்தன்னை  வறுப்பவர்கள்  பேதை!சழக்கரெனக்  காணுவார்  அன்னவரைப்  பிறரும்,         சாதிக்க  இயலாதான்  எனத்தூற்றும்  உலகும்!கழகத்தின்  தலைவியென  சசிதன்னைச்  சொல்லும்         கண்மணிகள்  எங்ஙனம்  தேர்தலில்  வெல்லும் ?பதவியெனும்  நிழல்தேடி  பதர்களதும்  அலைவதுவோ,         பாரதநன்  நாட்டுமக்கள்  அவர்கள்தமைத்  தேர்வதுவோ?நிழல்கள்தனை  நம்பிட்டு  இன்னாட்டு  மக்களவர்         நிஜங்கள்தனை  மறக்கின்றார்  நியாயமோ  இன்னதுவும்?உழலுவதேன்  அன்னவர்கள்  உண்மைதனை  உணராமல்         உத்வேகம்  தனைப்பெற்று  உயர்வடையத்  தான்தகுமோ ?குழப்பமதே  மிஞ்சுமெனக்  கொள்வதுவே  முறைமையதாம்,         கூர்கெட்டோர்  இன்னதனை  உணராததும்   பேதமையே!வெய்யில்நமை  வாட்டத்தான்  நிழல்தேடி  நாம்அலைவோம்,       விரக்தியை  காணத்தான்  வேண்டுவோம் இறையருளை!செய்வதெலாம்  வெற்றியென  இறைவனை நாம்நினையோம்,       செயலற்ற  நிலைதனிலே  சிந்தையதை  நினைந்திடுமாம்!பொய்யான  நம்பிக்கை  மமதைதனைக்  கூட்டிடுமாம்,       புகழ்பெருமை எல்லாம்நொடிப் பொழுதிலே போய்விடுமே!மெய்யான  தெல்லாமும்  மேலான  இறையருளே,       மேதினியில்  நமைவுயர்த்தும்  மேலான  அவன்நிழலே !நிழலெது  நிஜமெது  என்றிட்டு  ஆய்ந்து          நிஜமான  வெற்றிதனை  வாழ்வெலாம் கண்டுஅழகெனத்  தக்கதனை  ஆராதனை  செய்து          அகந்தனில்  மகிழ்வுதனை  ஊற்றெனப்  பெற்றுசழக்கொழியக்  காண்பதே  பெருமைதனைக்  கூட்டும்           சாதனையே  என்றிட்டு  சார்ந்தவர்கள்  போற்ற !தழைக்கின்ற  வாழ்வுக்கு  அச்சாரம்  அதுவே,           தக்கநல்  மதித்திறன்  என்றாகத்  தகுமே !நிழலதும்  பலப்பல  உருவம்பெறும்---எனினும்          நிஜத்திற்கு  என்றுமே  ஓர்வடிவம் !அழகதும்  காலத்தால்  மாற்றம்பெறும்---என்றும்          அழியா  திருப்பதோ  அகத்தழகே !சழக்கர்கள்  குணம்நொடி  தனில்மாறும்---அவர்க்கு           சத்தியம்  மிகமிக  தூரத்திலே !பிழைத்திட  எதையுமே  செயத்துணிவார்---கொண்ட           பேதமை  தனையவர்  என்றொழிப்பார் ?அன்பென்னும்  நிழல்தேடி  அலைகின்றப்  பெற்றோரைநன்றிகெட்டு  மறப்பதுவும்  நியாயமோ?---அன்னவரின்பின்னாளைய  வழ்வுதனில்  பேருண்மை  இதையணர்வார்,தன்வினைப்  பயன்தாக்கா  தா ?சுகபோக  நிழல்தன்னில்  சுகித்திருக்க  எண்ணுங்கால்விகல்ப்பமதை  மனங்கொண்டு  விரயமுறும்!---அகந்தனிலேகயமை  உணர்வுதனை  கணக்கற்றுக்  கொண்டுவிடநயமற்ற  வாழவடைவோம்  நாம் !பதவிநிழல்  தனைத்தேடி  பதர்களெலாம்  அலைகின்றார்,இதனைவிடக்  கொடுமையதும்  எதுவுண்டோ ?---முதலமைசர்என்றாகத்  துடித்தசசி  என்னதகுதி  தனைக்கொண்டாள் ;இன்னவளை  ஏற்பவரும்  யார் ?நிழலுருவம்  மாறிவரும்  நிஜம்மாறாப்  போதினிலும்;விழும்நிழலும்  மணிக்குமணி  வேறுபடும் !---கிழக்கினிலேகதிரவனும்  உதித்துயெழ  கருநிழலும்  மேற்கினிலே ;மதியமதில்  பாதங்கீழ்  மறையும் !நிழலதனை  நிஜமென்போர்  நீசர்களே  என்றாவார்,சழக்குண்டோ  இதனைப்போல்  சரித்திரத்தில் ?---விழலுக்குநீர்பாய்ச்சி  ஓய்வதுவும்  நியாயமோ ? அன்னவரகள்கூர்கெட்டோர்  என்றேநீ  கூறு !நிழலதனைக்  கண்டிட்டு  நிஜமென்றே  நம்புகின்றசழக்கரெலாம்  வாழ்விலெதைச்  சாதிப்பார் ?---கழகத்தின்தலைவியென  சசிதனனைத்  தாங்குகின்ற  கண்மணிகள்நிலைகண்டு  இரங்கிடுவாய்  நீ !                   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com