நிழல் தேடி: கே.நடராஜன்

நிழல் தேடி உன்   நடைப்பயணம் நிஜத்தைத் 
தொலைத்த பிறகா ? இது கண் கெட்ட பின் 
சூர்ய நமஸ்காரம் போல  அல்லவா !
விளை நிலத்தை நீ கூறு போட்டு விற்றது நிஜம் !

மீதம் இருக்கும் விளை நிலத்திலும் மீத்தேன் 
வாயு தேடி ஓயாமல் உன் மண்ணை நீ புண்ணாக்குவதும் 
நிஜம் !....நிலத்தடி நீரையும் கடைசி சொட்டு வரை 
உறிஞ்சி உன் மண்ணை  நீ ஒரு பாலைவனம் 
ஆக்குவது நிஜம் ! 

நீர் வற்றா ஆற்றுப் படுகையிலும் மணல் அள்ளி 
ஒரு ஆற்றின் ஓட்டத்தையே நீ தடுப்பதும் நிஜம் !
அடுக்கு மாடி கட்டிடக் குவியலுக்காக மரமும் 

செடியும் வெட்டப்பட்டு தரையில் குவிக்கப்பட்டது நிஜம் ! 
மழை நீர் நிரம்பும் ஏரி குளத்தில் கல்லும் மண்ணும் சேர்த்து 
கட்டிடம் பல நீ கட்டியதும் நிஜமே ! 

தன் வினை தன்னையே சுடும் ... உன் வினை 
உன்னை சுடும் உண்மை உனக்கு புரியாதா?
விண்ணில் வீடு கட்ட நினைக்கும் நீ உன் சொந்த 

மண்ணை நேசித்து அதை கட்டிக் காக்க  முடியாதா ? சற்றே 
யோசிக்க வேண்டும் நீ மனிதா ! நிஜம் இல்லையேல் 
நிழலும் இல்லை ! நிஜத்தைத் தொலைத்து விட்டு 
நிழலை நீ  தேடுவதில் எந்த அர்த்தமும் இல்லை ! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com