ஆறோடும் நீரோடும்:  நத்தம்.எஸ். சுரேஷ்பாபு

விளையாடிய காலங்கள் அவை!
ஆற்றங்கரை சூழ் அழகிய கிராமங்கள்!
வயல்வெளிகள் செழித்தோங்க
வாய்க்காலில் நீரோட
குதித்து குளித்து கும்மாளமிடும் சிறுவர்கள்!

ஆடிப் பதினெட்டில் - காவிரியில்
ஓடிப் பெருக்கெடுக்கும் வெள்ளம்
நீர்மகளுக்கு நிலமகளெல்லாம் பூச்சூட்டி
நிறைவோடு படையலிட்டு
கரைமீதமர்ந்து கலவை சாதம் உண்டு
கதை பேசி திரிந்த காலமொன்று உண்டு!

கள்ளழகர் கால்பதிக்க வென்று
வைகையில் கரைபுரண்டோடும் வெள்ளம்!
அம்மா மண்டபத்தில் முன்னோருக்கு
திதி கொடுத்து முழுக்கிட பாய்ந்தோடும் வெள்ளம்!

ஊரெல்லாம்  பயமுறுத்த
ஐப்பசி அடைமழையில் கரை உடைத்து
பெருக்கெடுக்கும் ,பெருமழை வெள்ளம்!
தாமிர பரணி தண்ணீரின் சுவையறியுமா?
எதிர்கால எம் சந்ததிகள்?

சிறுவாணி சிறுத்திட
பாலாறு பாழ்பட
சாயக் கழிவுகளின் புகலிடமாய்
சாக்கடைகளின் சுமைதாங்கி
மணல் கொள்ளைக்கு மடிந்து போய்!
ஒடிந்துகிடக்கும் எங்கள் ஆறுகளில்
நீரோடும் காலம் எக்காலம்?

 நிறைவோடு நீராடி
 மகிழும் காலம் எக்காலம்?
அக்காலம் தமிழனை உய்விக்கும்!
உலகெலாம் புகழ் சேர்க்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com